தனியுரிமை என்ற privacy

Privacy-Personal_V2png.png

 • தனி = separate
 • தனிப்பட்ட = personal
 • தனியுரிமை = privacy
 • தனிப்பயன் = personalisation
Advertisements

CS vs IT

Computer Science is the creation of software and hardware by using different programming skills.

IT is just the selection of the proper software or hardware for the task.

Neeraj Kumar Gupta
Director at ITES – CDC(Institute of Technical and Educational Study).

மூன்றாம் தரப்பு திரட்டு என்ற 3rd Party Library

#திரட்டு

ஓன்றுக்கு மேற்பட்ட பொருள்களால் திரட்டபட்ட ஒன்று, திரட்டு.

 • program library = நிரல்திரட்டு
 • media library = ஊடகத் திரட்டு
 • multi-media library = பல்லூடகத் திரட்டு
 • resource library = வளத்திரட்டு

செயற்கூறுகளை, நிரல்களை கொண்ட திரட்டு, நிரல்திரட்டு.

நிரல்திரட்டுகளை எழுதும் முதன்மை தரப்பினர் யார் ?
– நிரல்மொழியை வடிவமைத்தவர்கள்
– நீங்கள்

இவ்விருவர் அல்லாது வேறுயார் நிரல்திரட்டு எழுதினாலும், அவர்களை மூன்றாம் தரப்பு என்று கூறுவோம்.

மூன்றாம் தரப்பினரால் தொகுக்கப்பட்ட திரட்டு, மூன்றாம் தரப்பு திரட்டு (3rd Party Library )

மூன்றாம்தரப்பு திரட்டை பயன்படுத்தும் முன், அவற்றின் உரிமத்தைப் பற்றி அறிதல் முக்கியம். சில மூன்றாம்தரப்பு திரட்டை பணம் கொடுத்து வாங்க வேண்டும், வாங்காமல் படுத்துதல் குற்றம். மீறினால் அபராதம் கட்ட வேண்டி ஆகிவிடும்.

சிறப்புசொற்கள் Special Words

நிரல்மொழிகள் உள்ள மிகசிறிய பகுதியை வில்லை என்று சொல்லவொம். இது நிரல்மொழியின் ஓரு தனித்த அலகு.

வில்லை = token
தனித்த அலகு = independent unit

இந்த வில்லைகளைப் பல வகையாகப் பிரிக்கலாம்.

 • சிறப்புசொல் = special word
 • குறிப்பெயர் = identifier
 • நிலையுரு = literal
 • செயற்குறி = operator
 • நிறுத்தற்குறி = punctuation

Token

சிறப்புசொல்

நிரல்மொழியில் முக்கிமான, தனக்கென ஒரு சிறப்புப் பொருளையும் பெற்றிருக்கும் சொற்களைத்தான், சிறப்புசொற்கள் என்கிறோம்.

சொற்களை மேலும் இருவகைப் படுத்தலாம்
* குறிச்சொல் keyword
* ஒதுக்கியசொல் reserved word

குறிச்சொல்

பெரும்பாலும் தொடரியல் விதிகள் வரும் முக்கியசொல், குறிச்சொல். அது தான் இருக்கும் சூழலை(அ)இடம் சார்ந்தது.

எ.கா. if, else, while

ஒதுக்கியசொல்

நிரல்மொழியின் தேவைக்கென ஒதுக்கப்பட்ட சொல், ஒதுக்கியசொல். நிரல்மொழியின் வரும்காலப் பயன்பாட்டுக்காகச் சில சொற்கள் ஒதுக்கப்பட்டலாம். ஒதுக்கியசொல் என்பது நிரல்மொழியின் பதிப்பினை பொறுத்தது.

நாம் இயற்றும் நிரலில், ஒதுக்கியசொற்களைப் பெயர்சொற்களாகப் பயன்படுத்தக் கூடாது. ஒரு மாறியின் (அ) ஒரு செயற்கூற்றின் பெயராக அச்சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.

நிலையுரு

நிலையாகத் தனித்து நின்று, ஒரு மதிப்பினை பெற்றிருக்கும் வில்லைதான், நிலையுரு.

எ.கா.

 • 5 என்ற எண்
 • “வணக்கம்” என்ற சரம்

செயற்குறி

ஒரு செயலை குறிக்கும் வில்லை, செயற்குறி.

எ.கா.

 • + கூட்டல் குறி

நிறுத்தற்குறி

நிரல்மொழி கூற்றுகளை நிறைவு செய்யவும், சரங்களைக் குறியிடவும் பயன்படும் குறிகள், நிறுத்தற்குறி.

punctuation

சிதைப்பு என்ற decomposition

சிதைத்தல் என்றால் ஒரு பொருளின் தன்மையைக் கெடுத்தல் (அ) உருக்கொலைத்தல் என்று சொல்லலாம்.

பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசினால், தமிழ்மொழி சிதையும்.

சிதைப்பது என்பதை ஒரு கெட்டசெயலாக மட்டும் பார்க்ககூடாது.
எ.கா.

 • மக்குப்பொருட்களை மண்புழுக்களைக் கொண்டு சிதைப்பத்தின் மூலம் பயிர்களுக்கு நல்ல உரத்தை உருவாக்கலாம். இந்தச் சிதைப்பு நல்லதே, அதுவே இயற்கை வேளாண்மை.

அதுபோல, நமக்கு இருக்கும் சிக்கலைத் தீர்க்க முதலில் அதனைச் சிதைத்து பல சிறிய சிக்கலாகப் பிரித்து, அவற்றைத் தனித்தனியாகத் தீர்ப்பது எளிது. இவ்வாறு சிக்கலைத் தீர்க்கும் உதவும் பயனுள்ள உத்திக்குப் பெயர் சிதைப்பு (decomposition).

சேர்ப்பு, கூட்டு = composition
சிதைப்பு = decomposition
உத்தி = strategy