adapt-adapter-agile தமிழில் ஓர் அறிமுகம்

தகு என்றால் ஏற்கதக்கது என்று பொருள்.

தகு = suitable, appropriate

இது தகுமோ ? என்ற கேள்வியின் நோக்கம் இது பொருத்தமானதா என்று அறிவதே.

தேர்தலில் நாம் தேர்வு செய்பவர்களின் தகுதியை இருள்தீர தேர்ந்து எண்ணல் வேண்டும்.

தகுதி = தகுந்த நிலை = தகவு

அப்போ adapt என்றால் என்ன ?

ஒரு சூழலுக்கு ஏற்றவாறு மாறுதல் என்று பொருள், தகவமைத்தல்

தகவமைத்தல் = தகவு + அமைத்தல்

  1. to adapt = தகவாக்க
  2. adapt (v) = தகவமை / தகவாக்கு
  3. adaptation = தகவமைப்பு

வேறுபட்ட கூறுகள் (*component *) இணங்கி ஏற்றவாறு வேலை செய்ய உதவும் கூறு தகவி.

adapter = தகவு + ‘இ’ = தகவி

[ *இ => பெயர் விகுதி *]

adapter

வேறுபட்ட கூறுகள் பொருந்த செய்வதால் இதனை பொருத்தி என்றும் அழைப்பர்

adapter = தகவி / பொருத்தி

எளிதில் சூழலுக்கு ஏற்றவாறு மாறு (தகவுகின்ற) நிலை = தகவெளிமை ( agile )

தகு-தகவு-தகவி-தகவெளிமை

 தகவெளிமை = agile

agile-adapt

One thought on “adapt-adapter-agile தமிழில் ஓர் அறிமுகம்

  1. கணியம் இதழில் (http://www.kaniyam.com/ ) என்னுடைய Agile/Scrum பற்றிய கட்டுரைத் தொடருக்காக “Agile”-க்கு தமிழ் வார்த்தை தேடிக் கொண்டிருந்தேன். உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன். நன்றி. இந்த நற்பணியைத் தொடருங்கள்.

Leave a comment